செய்திகள்
சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு பெருங்காளியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்.

கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை- சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

Published On 2021-10-09 05:07 GMT   |   Update On 2021-10-09 06:43 GMT
அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தனது சொந்த ஊரான லெப்பை குடியிருப்பு பெருங்காளியாபுரத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கு சென்றார்.

சரியாக 7.10 மணிக்கு கையெழுத்திட்டு 4 கலரில் உள்ள ஓட்டுச்சீட்டுகளையும் பெற்று வாக்களித்தார்.

அதன்பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-



கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்
பதவி ஏற்ற பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதுவரை நான் எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் அவரது மகன் அலெக்ஸ்ராஜும் உடன் சென்று வாக்களித்தார்.

Tags:    

Similar News