செய்திகள்
அமைச்சர் சேகர் பாபு

கோவில்கள் விவகாரம்... அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு

Published On 2021-10-08 12:12 GMT   |   Update On 2021-10-08 15:20 GMT
மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. 

பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.



இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணையவழியில் வாடகை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது என்றார்.

‘மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசின் ஆணைப்படி தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே போராட்டம் நடத்துபவர்கள் மத்திய அரசிடம் இருந்து, திருவிழாக்களுக்கு அனுமதி, போராட்டம் நடத்த அனுமதி என கடிதம் வாங்கி கொடுத்தால் அதனை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது’ என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
Tags:    

Similar News