செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்-சைமா வலியுறுத்தல்

Published On 2021-10-08 07:41 GMT   |   Update On 2021-10-08 07:41 GMT
தொழிலாளர்கள் மருத்துவ தேவைக்காக 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவைக்கு செல்ல வேண்டியது உள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைமா சங்கத்தின் தலைவர்  ஏ.சி.ஈஸ்வரன்  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

திருப்பூர் பின்னலாடை தொழில் தொடங்கி நூறாண்டை நோக்கிய பயணத்தில் உள்ளது. திருப்பூரில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாதந்தோறும் இ.எஸ்.ஐ., திட்டத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

எனினும் மருத்துவ தேவைக்காக 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவைக்கு செல்ல வேண்டியது உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான  பணிக்காக 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆனால் இன்னும் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே பின்னலாடை தொழிலாளர்களின் சிரமங்களை போக்கும் வகையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமானப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News