செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் வயல்வெளி செயல்விளக்க திட்டப் பணிகள் தீவிரம்

Published On 2021-10-07 05:02 GMT   |   Update On 2021-10-07 05:02 GMT
வயல்வெளி செயல்விளக்க திட்டத்தில் உடுமலை வட்டாரத்தில் உள்ள குறிச்சிக்கோட்டை, ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உடுமலை:

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் படைப்புழு மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல்வெளி செயல்விளக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் உள்ள குறிச்சிக்கோட்டை, ஆண்டியகவுண்டனூர், மானுப்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இக்கிராமங்களை சேர்ந்த தலா 5 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் என்றளவில் 15 செயல்விளக்க திடல் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரத்து 500 மதிப்பிலான இடுபொருட்கள் வேளாண்துறையால் வழங்கப்பட்டது.

இதில் வேப்பம் புண்ணாக்கு 75 கிலோ, படைப்புழு இனக்கவர்ச்சி பொறி 5 எண்கள், விதை நேர்த்தி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மக்காச்சோள பயிர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தெளிப்பதற்கான பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. 

இந்த செயல்விளக்க திடல்களில் பெறப்படும் ஆய்வு முடிவுகள் பூச்சியியல் துறையில் வேளாண்துறையால் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதேபோல் வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு குறித்த ஆய்வுகளுக்காகவும், தனியாக விளைநிலம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடப்பதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News