செய்திகள்
கோப்புபடம்

வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் திட்டப் பணிகள்

Published On 2021-10-06 06:35 GMT   |   Update On 2021-10-06 06:35 GMT
பெரிய கருணைபாளையம் போரில் இருந்து காடேஸ்வரா நகர் டேங்குகளுக்கு தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவினாசி:

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி பெரிய கருணைபாளையம் அம்பேத்கர் நகரில் பைப்லைன் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி வேலுசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு பெரிய கருணைபாளையம் அம்பேத்கர் நகரில் இருந்து ரிச்செவின்யூ வரை புதிதாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு பைப் லைன் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் மேடை கட்டி டேங்க் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரிய கருணைபாளையம் போரில் இருந்து காடேஸ்வரா நகர் டேங்குகளுக்கு தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் காசி கவுண்டன் புதூர் சக்தி நகரில் ஒவ்வொரு வீடுகளுக்கும் பைப் லைன் அமைக்கப்பட்டது.  

வேலாயுதம்பாளையம் தண்ணீர் டேங்க் அருகில் கேட்வால்வு பொருத்தும் பணி மற்றும் விநாயகர் கோவில் அருகில் கேட்வால்வு பொருத்து பணியும், குடி தண்ணீர் டேங்க் அருகில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டதும் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவடைந்துள்ளது.
Tags:    

Similar News