செய்திகள்
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்ற காட்சி.

திருப்பூர் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Published On 2021-10-04 12:39 GMT   |   Update On 2021-10-04 12:39 GMT
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த மாதம் 8-ந் தேதி கலை அறிவியல் கல்லூரிகளில் 2 மற்றும் 3 - ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்றுமுதல் வகுப்புகள் தொடங்கியுள்ளது.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலைகல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளுக்கு சென்றனர்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு இன்று முதலாமாண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். அவர்களை பேராசிரியர்கள் மற்றும்2, 3ம் ஆண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாததால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த மாணவர்கள் இன்று கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் போனது.  
Tags:    

Similar News