செய்திகள்
ரெயில்

புதுச்சேரி, திருப்பதி, மதுரை உள்பட 48 ரெயில்கள் நேரம் மாற்றம்

Published On 2021-10-04 10:44 GMT   |   Update On 2021-10-04 10:44 GMT
மதுரை-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (02638) தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4.08 மணிக்கு வந்து சேரும்.
சென்னை:

தெற்கு ரெயில்வேயில் புதிய காலஅட்டவணை 4-வது கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 48 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணைப்படி இன்று முதல் ரெயில்கள் இயக்கப்பட்டன. நேரம் மாற்றப்பட்ட முக்கிய ரெயில்களின் விவரம் வருமாறு:-

அவுரா-கன்னியாகுமரி விரைவு சிறப்பு ரெயில் (02665) நாகர்கோவிலை காலை 9.25 மணிக்கு அடையும். இந்த ரெயில் கன்னியாகுமரியை காலை 10.05 மணிக்கு சென்றடையும்.

மும்பை சி.எஸ்.எம்.பி.- நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06351) வள்ளியூர் ரெயில் நிலையத்துக்கு காலை 6.04 மணிக்கு வந்து சேரும். கன்னியாகுமரி- கே.எஸ்.ஆர். பெங்களூர் விரைவு ரெயில் (06525) குழித்துறை ரெயில் நிலையத்தை காலை 11.04 மணிக்கு அடையும்.

மறுமார்க்கமாக பெங்களூர் கே.எஸ்.ஆர்- கன்னியாகுமரி ரெயில் (06526) குழித்துறை ரெயில் நிலையத்தை மதியம் 1.44 மணிக்கும், இரணியல் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.14 மணிக்கும், நாகர்கோவில் சந்திப்பை பிற்பகல் 3.10 மணிக்கும் அடையும்.

பாவ்நகர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (09572) நாகர்கோவில் டவுனை இரவு 7.38 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் வள்ளியூரை இரவு 8.19 மணிக்கு சென்றடையும். மதுரை-பிகானீர் அதிவிரைவு ரெயில் (06053) சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.



மதுரை-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (02638) தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4.08 மணிக்கு வந்து சேரும். சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (06203) சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் அரக்கோணம் சந்திப்பை மாலை 5.38 மணிக்கும், திருத்தணி ரெயில் நிலையத்தை 5.58 மணிக்கும் அடையும்.

புதுச்சேரி-எழும்பூர் சிறப்பு ரெயில் (06116) காலை 8.08 மணிக்கு வந்தடையும். இது தவிர நிஜாமுதீன்-கன்னியாகுமரி, நாகர்கோவில்-சாலிமார், திருநெல்வேலி- காந்தி தாம் உள்ளிட்ட ரெயில்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான ரெயில்களின் நேரம் மாற்றம் இன்று முதலும், சில ரெயில்களின் நேரம் மாற்றம் 6, 7, 8-ந்தேதி முதலும் அமல்படுத்தப்பட உள்ளது.


Tags:    

Similar News