செய்திகள்
சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்.

நங்கவள்ளி அருகே சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

Published On 2021-10-04 08:33 GMT   |   Update On 2021-10-04 08:33 GMT
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இன்று பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நங்கவள்ளி:

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேர்தல் நேரங்களில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இங்கு சாமி தரிசனம் செய்து விட்டு சென்றால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.


இந்த நிலையில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் இன்று பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் செம்மலை, நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், தாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மாதையன், சோரகை மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News