செய்திகள்
சிறப்பு ரெயில்

மதுரை- ராமேசுவரம் இடையே 7-ந்தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்

Published On 2021-10-01 10:13 GMT   |   Update On 2021-10-01 10:13 GMT
மதுரை - ராமேசுவரம் இடையே வருகிற 7-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படுவதாக மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை:

மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

மதுரை - ராமேசுவரம் இடையே வருகிற 7-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரெயில் இயக்கப்படுகிறது.

ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில், காலை 9.30 மணிக்கு மதுரை செல்லும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.05 மணிக்கு ராமேசுவரம் செல்லும்.

இந்த ரெயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப் புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரையில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News