செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Published On 2021-10-01 09:13 GMT   |   Update On 2021-10-01 09:13 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளை முன்னிட்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி வருமாறு:-



குடியரசுத் தலைவருக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின்போது தாங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்- சீமான் அறிக்கை
Tags:    

Similar News