செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் 1½ கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை

Published On 2021-10-01 07:39 GMT   |   Update On 2021-10-01 07:39 GMT
வருகிற 10-ந்தேதி மெகா சிறப்பு முகாம் மீண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த மாதமும் சிறப்பு முகாம்கள் மூலம் அதிகளவிலான தடுப்பூசிகளை செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 3 மெகா சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நேற்று வரை 4 கோடியே 50 லட்சத்து 28 ஆயிரத்து 107 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 61 லட்சத்து 89 ஆயிரத்து 426 முதியோர்களுக்கு போடப்பட்டுள்ளது.

45 வயது முதல் 59 வயது வரை உள்ள பிரிவில் 1 கோடியே 39 லட்சத்து 58 ஆயிரத்து 828 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரை உள்ள பிரிவில் 2 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரத்து 55 பேருக்கு
தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 44 லட்சத்து 25 ஆயிரத்து 866 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 53 லட்சத்து 31 ஆயிரத்து 469 முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது தமிழக சுகாதாரத்துறையின் சாதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி மெகா சிறப்பு முகாம் மீண்டும் நடத்தப்பட உள்ளது. இந்த மாதமும் சிறப்பு முகாம்கள் மூலம் அதிகளவிலான தடுப்பூசிகளை செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.



கடந்த மாதம் ஒரு கோடியே 38 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த மாதம் 2 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்துக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பணி விரைவுப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தடுப்பூசி அதிகம் செலுத்திய மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.


Tags:    

Similar News