செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்-வேன்.

உடுமலை அருகே அரசு பஸ் மீது வேன் மோதல்-பனியன் தொழிலாளர்கள் 22 பேர் காயம்

Published On 2021-09-30 12:08 GMT   |   Update On 2021-09-30 12:11 GMT
உடுமலையில் இருந்து பெல்லம்பட்டிக்கு சென்ற அரசு பஸ் பூளவாடி அருகே மேட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது.
உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூளவாடி பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று மதியம்  மினிவேன் பனியன் கம்பெனிக்கு சென்றது. கோட்டமங்கலம் ஊராட்சி வழியாக வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது உடுமலையில் இருந்து  பெல்லம்பட்டிக்கு சென்ற அரசு பஸ்  பூளவாடி அருகே மேட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது.இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறம் மினிவேன் பயங்கரமாக மோதியது.

இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த  தொழிலாளர்கள் 22 பேர் காயமடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அப்பகுதி பொதுமக்கள்  மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

3பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News