செய்திகள்
வங்கி

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறையா?

Published On 2021-09-30 09:27 GMT   |   Update On 2021-09-30 09:27 GMT
அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை:

நாளை அக்டோபர் 1-ந் தேதி பிறக்கிறது. அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று ஒரு தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதன் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படுமோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு நிலவிவருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அக்டோபர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வருவதால் நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.



அக்டோபர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறைநாள் ஆகும். மேலும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. 2-ந்தேதி காந்திஜெயந்தி விடுமுறை ஆகும். 14-ந்தேதி ஆயுத பூஜை, 15-ந்தேதி விஜயதசமி, 19-ந்தேதி மிலாடிநபி விடுமுறைகள் என மொத்தம் 11 விடுமுறை தினங்கள் வருகின்றன.

ஆனாலும் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல செயல்படும். மேலும் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

Similar News