செய்திகள்
கைது

மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 175 பேர் கைது

Published On 2021-09-28 11:05 GMT   |   Update On 2021-09-28 11:05 GMT
மார்த்தாண்டம் கனரா வங்கி முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்த்தாண்டம்:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்தும் மார்த்தாண்டம் கனரா வங்கி முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தி.மு.க. மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பால் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுரேஷ்குமார், ம.தி.மு.க. நிர்வாகி பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன். ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.

இதில் மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் மாஹின் அபுபக்கர், நாஞ்சில் டொமினிக், பைங்குளம் ஊராட்சி செயலாளர் அம்சி நடராஜன், வரதராஜன், அருள்ராஜ், மாஹின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 175 பேரை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News