செய்திகள்
கைது

நிலக்கோட்டையில் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

Update: 2021-09-28 10:48 GMT
நிலக்கோட்டையில் ஏரியா ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் பொன்னையா(34). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சிலுக்குவார்பட்டி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த சகாயமாதாபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்குமார்(29) என்பவர் பொன்னையாவை பார்த்து நான் இந்த ஏரியா ரவுடி எனக்கூறி கத்தியை காட்டி மாமூல் கேட்டுள்ளார்.

அவர் பணம் தர மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் பொன்னையா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த செந்தில்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News