செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஆசிரியர் - மாணவர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா

Published On 2021-09-27 10:35 GMT   |   Update On 2021-09-27 10:35 GMT
திருப்பூர் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை ஆசிரியர்கள், மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் கணபதிபாளையம் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் படிக்கும் 578 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சேவூர் அரசு  பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன், உடுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் மாணவி ஒருவர், புங்கமுத்தூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம்வகுப்பு மாணவன், மடத்துக்குளம் ஜே.ஆர்.சி பள்ளியில் 10-ம்வகுப்பு மாணவன், குன்னத்தூர் பெண்கள் பள்ளியில் 2 மாணவிகள், வீரபாண்டி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாளில் பள்ளி ஆசிரியர் உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News