செய்திகள்
கோப்புபடம்

குறைந்த செலவில் ஆடை தயாரிக்க இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் - வல்லுனர்கள் அறிவுறுத்தல்

Published On 2021-09-27 04:25 GMT   |   Update On 2021-09-27 04:25 GMT
சர்வதேச சந்தையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்யும் ஆயத்த ஆடைகளின் விலையை குறைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் தொழிற்சாலை பொறியியலின் பங்களிப்பு என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில் பி.எஸ். அப்பேரல்ஸ் நிறுவன வல்லுனர்கள் தனசேகர், சிவலிங்கம் ஆகியோர் பேசியதாவது:

சர்வதேச சந்தையில் போட்டி நிலை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி செய்யும் ஆயத்த ஆடைகளின் விலையை குறைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. அதேநேரம் ஆடை தயாரிப்பு மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்து செலவு உயர்வு, தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளது.

இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் வழிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே குறைந்த செலவில் ஆடை தயாரிப்பதை சாத்தியமாக்க முடியும். போட்டி நாடுகளைவிட நமது நாட்டில், ஆடை உற்பத்தி செயல்திறன் மிக குறைவாக உள்ளது. ஆடையில் தரம் குறைபாடு, கால விரயம், தர கட்டுப்பாடு பிரச்சினைகள் ஆடை உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க செய்துவிடுகின்றன.

இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் வழிமுறைகளான தொழிலாளர் - எந்திர விகிதம்,  நிமிட செலவு கணக்கு, தொழிலாளர்களின் திறன் மேம்பாடு, உற்பத்தி திறனை மேம்படுத்துதல்களை பின்பற்ற வேண்டும். திட்டமிட்டு தேவையான அளவில் மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.

குறைந்த நேரத்தில் உயர் தரத்தில் அதிக ஆடை உற்பத்தி செய்வதற்கு இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் கைகொடுக்கும். எனவே இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
Tags:    

Similar News