செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Published On 2021-09-26 14:17 GMT   |   Update On 2021-09-26 14:21 GMT
மதுரை, கரூர், நெல்லை, கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சென்னை:

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் இன்று 1,600 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.



இந்நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22.08 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை, கரூர், நெல்லை, கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Tags:    

Similar News