செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா

Published On 2021-09-26 12:47 GMT   |   Update On 2021-09-26 12:47 GMT
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 50 ஆயிரத்து 282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்து 289 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் நேற்று 56 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 303 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 529 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 484 பேர் பலியாகி இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்த நபர்களின் எண்ணிக்கை 485 ஆகஅதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News