செய்திகள்
விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 5,729 பதவி இடங்களுக்கு 20,099 பேர் போட்டி

Published On 2021-09-26 10:28 GMT   |   Update On 2021-09-26 10:28 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,097 பதவியிடங்களில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 22-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,097 பதவியிடங்களில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் மீதமுள்ள 5,729 பதவி இடங்களுக்கு 20,099 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகள் உள்ளது. இந்த பதவிகளுக்கு 13,957 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 224 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,531 பேர் வாபஸ் பெற்று உள்ளனர். 487 பேர் போட்டிஇன்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் 10,715 பேர் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News