செய்திகள்
கோப்புபடம்

நிலுவை ஏற்றுமதி சலுகை பெற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2021-09-26 08:53 GMT   |   Update On 2021-09-26 08:53 GMT
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் (டி.ஜி.எப்.டி.,) இணையதளத்தில், பழைய சலுகை பெற விண்ணப்பிப்பதற்கான இணைய பக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திருப்பூர்:

ஏற்றுமதி துறையினருக்கு நிலுவையில் உள்ள சலுகை தொகை 56 ஆயிரத்து 27 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க உள்ளது. சலுகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள், சலுகைகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கவேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் (டி.ஜி.எப்.டி.,) இணையதளத்தில், பழைய சலுகை பெற விண்ணப்பிப்பதற்கான இணைய பக்கம்  செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2018, ஜூலை 1-ந் தேதி முதல் 2020 டிசம்பர் 31-ந் தேதி வரையிலான எம்.இ.ஐ.எஸ்., சலுகை,  2019 மார்ச் 6-ந்தேதி வரையிலான ஆர்.ஓ.எஸ்.எல்., சலுகை, 2019 மார்ச் 7-ந்தேதி முதல் 2020 டிசம்பர் 31-ந் தேதி வரையிலான ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்.,  சலுகைகளுக்கு டி.ஜி.எப்.டி., தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

ஏற்றுமதியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகளை வழங்க மத்திய அரசு வேகம்காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. டி.ஜி.எப்.டி.,ல், சலுகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைய தள பக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், நிலுவையில் உள்ள சலுகைகளை பெறுவதற்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பிப்பதில் சில சிக்கல்கள் எழலாம். அவற்றை ஏ.இ.பி.சி.,க்கு தெரிவித்தால்  துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்று, தீர்வு காண தயாராக உள்ளோம்.நடப்பு ஆண்டு ஜனவரி முதலான ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., மற்றும் ஆர்.டி.டி.இ.பி., சலுகைகளை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விரு சலுகைகளுக்கு, ஐ.சி.இ., கேட் தளத்தில் (இந்தியன் கஸ்டம்ஸ் எலக்ட்ராணிக் கேட்வே) விண்ணப்பிக்கவேண்டும். வெகு விரைவில், இந்த தளமும் செயல்பாட்டுக்கு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:    

Similar News