செய்திகள்
திருமூர்த்திஅணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்ற காட்சி.

திருமூர்த்திஅணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

Published On 2021-09-26 08:10 GMT   |   Update On 2021-09-26 08:10 GMT
திருமூர்த்தி அணையில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மீட்பு துறையும் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது.
உடுமலை:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கையும், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமூர்த்தி அணையில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மீட்பு துறையும் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. கணேசமூர்த்தி தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து அணைப்பகுதியில் படகு இல்லத்தின் அருகே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை ரப்பர் படகில் சென்று மீட்பது போன்றும் அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது போன்றும், தண்ணீரில் மூழ்கியவர்களை படகில் சென்றும் டியூப் அணிந்து கொண்டு தேடுவது போன்றும் பேரிடர் மீட்பு படையினரும் தீயணைப்பு துறையினரும் இணைந்து தத்ரூபமாக செய்து காட்டினர்.

இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி, உடுமலை மற்றும் திருப்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் அரிராமகிருஷ்ணன், பாஸ்கரன்,தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் கணேஷ்நாயர், சுகாதார குழுவினர், பொதுப்பணித்துறை ,வருவாய்துறைஉள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News