செய்திகள்
கைது

உவரியில் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Update: 2021-09-25 16:16 GMT
உவரியில் கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கரைச்சுற்று புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவஇரக்கம் (வயது 41).

இவர் கடந்த 2007-ம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அங்கும் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவருக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசில் சரண் அடைந்து, சிறை தண்டனை அனுபவிக்காமல் தலைமறைவானார்.

இதனால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நேற்று தேவஇரக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News