செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-25 14:41 GMT   |   Update On 2021-09-25 14:41 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதியும், 19-ந் தேதியும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதியும், 19-ந் தேதியும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 773 தடுப்பூசி பேர் செலுத்தி கொண்டனர். இதனிடையே 3-ம் கட்டமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகள் என மொத்தம் 500 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News