செய்திகள்
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு -அண்ணாமலை பேட்டி

Published On 2021-09-25 12:57 GMT   |   Update On 2021-09-25 14:09 GMT
முதலமைச்சர் கவனம் செலுத்தி, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை இந்த மாதிரி பாதையில் விடக்கூடாது என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
சென்னை:

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் 105வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, தீனதயாள் உபாத்யாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், “இல்லம் செல்வாம், உள்ளம் வெல்வோம்’ என்ற பிரசார இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு மாத காலமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

‘‘குறிப்பாக இரண்டு மூன்று மாவட்டங்களில் பழிக்குப்பழியாக நடக்கும் கொலை அதிகமாகிவிட்டது. இதுபோன்ற கொலை அதிகமானாலே அரசு செயலிழந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் உள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், முதலமைச்சர் கவனம் செலுத்தி, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை இந்த மாதிரி பாதையில் விடக்கூடாது. பழிக்குப்பழியாக கொலை ஆரம்பித்துவிட்டால் அதன் முடிவுக்கு எல்லையே கிடையாது. எனவே, இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என அண்ணாமலை வலியுறுத்தினார்.
Tags:    

Similar News