செய்திகள்
தமிழக அரசு

இவர்களெல்லாம் அனுமதியின்றி மண் எடுக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2021-09-25 08:13 GMT   |   Update On 2021-09-25 10:41 GMT
மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

1.5 மீட்டர் வரை மண் எடுப்பதற்கான அனுமதியை வழங்கியது. மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி கனிம வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மண் எடுக்கலாம். மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீட்டர் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே சாலை, ஆறுகள், நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News