செய்திகள்
கைது

லாரியில் ரேசன் அரிசி கடத்திய விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-09-24 07:39 GMT   |   Update On 2021-09-24 07:39 GMT
சீனுவாசன் குறைந்த விலைக்கு ரேசன் அரிசி, கோதுமை மூட்டைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக லாரியில் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேர்குணம் பிரிவு சாலையில் குடிமைபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுதுறை டி.எஸ்.பி. ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 350 கிலோ ரேசன் அரிசி, 300 கிலோ கோதுமை இருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

அதில் அவர்கள் கிளியனூரை அடுத்த ராமலிங்கம் பேட்டை ஏழுமலை (வயது 57), வீரமணி (48), தேர்குணத்தை சேர்ந்த லாரி டிரைவர் சீனுவாசன் (38) என்பதும், ஏழுமலை எடச்சேரியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராகவும், வீரமணி தற்காலிக விற்பனை உதவியாளராக பணிபுரிகின்றனர்.

இவர்களிடம் இருந்து சீனுவாசன் குறைந்த விலைக்கு ரேசன் அரிசி, கோதுமை மூட்டைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக லாரியில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலை உள்பட 3 பேரையும் கைது செய்து ரேசன் அரிசி, கோதுமை மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News