செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்ட போது எடுத்த படம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ரூ.12 லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-09-23 04:46 GMT   |   Update On 2021-09-23 04:46 GMT
கொரொனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பு உண்டியல் அனைத்தும் திறந்து எண்ணப் படாமல் இருந்தது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். தற்போது கொரொனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பு உண்டியல் அனைத்தும் திறந்து எண்ணப் படாமல் இருந்தது.

இந்த நிலையில் அனைத்து உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில், கண்காணிப்பாளர் செந்தில் குமார், ஆய்வாளர் சரஸ்வதி, கோவில் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.12 லட்சத்து 16 ஆயிரத்து 9 ரொக்கம், 24 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 4 டாலர் கிடைத்தன.
Tags:    

Similar News