செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்ட போது எடுத்த படம்.

மண்டைக்காடுபகவதி அம்மன் கோவிலில் ரூ.13½ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-09-22 04:02 GMT   |   Update On 2021-09-22 04:02 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.13½ லட்சமும், 124 கிராம் தங்கமும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மணவாளக்குறிச்சி :

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கேரளாவை சேர்ந்த பெண்கள் இருமுடி கட்டி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

6 மாதங்களுக்கு பின்னர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குளச்சல் சரக ஆய்வாளர் செல்வி, கோவில் கண்காணிப்பாளர் குற்றாலம், ஸ்ரீகாரியம் மோகன்குமார், கன்னியாகுமரி கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்து 754 ரொக்கம் மற்றும் 124.5 கிராம் தங்கம், 184 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன.
Tags:    

Similar News