செய்திகள்
கோப்புப்படம்

60 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 134 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2021-09-21 03:45 GMT   |   Update On 2021-09-21 03:45 GMT
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தமுள்ள 60 பதவிகளுக்கு இதுவரை 134 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 25 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுதாக்கலில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட 3 பேரும், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். காலியாக உள்ள 10 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேற்று 30 பேரும் ஏற்கனவே 9 பேரும் என 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சிகளில் காலியாக உள்ள 23 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கு நேற்று 22 பேரும் ஏற்கனவே 14 பேரும் என மொத்தம் 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை காலியாக உள்ள 35 பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 80 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஒரு பதவி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஒரு பதவி, 5 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 16 வேட்பு மனுக்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 27 பேரும் என 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மொத்தமுள்ள 60 பதவிகளுக்கு இதுவரை 134 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News