செய்திகள்
ஜிங்க் மாத்திரை.

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க குழந்தைகளுக்கு ஜிங்க் மாத்திரை

Published On 2021-09-19 08:09 GMT   |   Update On 2021-09-19 08:09 GMT
ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

பிறந்தது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் நலன் காக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு வாரங்கள் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு  2.21 லட்சம் ஓ.ஆர்.எஸ்., கரைசல் பொட்டலம், ‘ஜிங்க்‘ மாத்திரைகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப, துணை சுகாதார நிலையம், நகர்நல மையம், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம் நடத்தி குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பொட்டலம், வயிற்று போக்கு இருந்தால்  ஜிங்க் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வரும் 31-ந்தேதி வரை முகாம் நடைபெறும். அருகில் உள்ள மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து ஓ.ஆர்.எஸ்., கரைசல், தேவையிருப்பின் ஜிங்க் மாத்திரை பெற்றுக் கொள்ளலாம். 

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கரைசல் வழங்கப்படுகிறது. எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றனர்.
Tags:    

Similar News