செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் மீண்டும் நாளை மெகா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-18 16:13 GMT   |   Update On 2021-09-18 16:13 GMT
தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (19-ந் தேதி) மீண்டும் நடக்கிறது. முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் மட்டும் 266 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். வ.உ.சி மைதானத்தை சுற்றிலும் 5 இடங்கள், சந்தை, போலியோசொட்டு மருந்து போடும் இடங்கள் என சுமார் 1,500 இடங்ளில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 12-ந் தேதி 1475 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமின் மூலம் இலக்கை கடந்து 1.51 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் மட்டும் 76ஆயிரத்து 817 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை நடக்கும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News