செய்திகள்
கோப்புபடம்.

உடுமலையில் செக்யூரிட்டி ஏஜென்சி உரிமையாளரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

Published On 2021-09-17 10:09 GMT   |   Update On 2021-09-17 10:09 GMT
காரை குட்டை திடலில் நிறுத்திவிட்டு நடந்து வங்கிக்கு சென்றார். பின்னர் பணப்பையுடன் காருக்கு திரும்பி வந்த வெங்கடேசன் பணப்பையை காரின் பின் இருக்கையில் வைத்தார்.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்  (வயது 45). செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் பூலாங்கிணறிலிருந்து உடுமலைக்கு காரில் வந்தார். 
காரை குட்டை திடலில் நிறுத்திவிட்டு நடந்து வங்கிக்கு சென்றார். 

பின்னர் பணப்பையுடன் காருக்கு திரும்பி வந்த வெங்கடேசன் பணப்பையை காரின் பின் இருக்கையில் வைத்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெங்கடேசனிடம் காரில் இருந்து ஆயில் கசிவதாக கூறினார். இதை நம்பி வெங்கடேசன் காரை பார்த்தார். ஆனால் ஆயில் ஏதும் கசியவில்லை. இதையடுத்து காரை அங்கிருந்து ஓட்டி சென்றார். 

சிறிது தூரம் சென்ற பின்பு பின் இருக்கையில் பணப்பை இருக்கிறதா என்று பார்த்த போது பணப்பையை காணவில்லை. காரில் ஆயில் கசிவதாக கூறி திசைதிருப்பி விட்டு பணப்பையை அந்த வாலிபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தையா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருடு போன பையில் ரூ.25 ஆயிரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News