செய்திகள்
கோப்புபடம்

நூலகத்திற்கு ரூ.20லட்சம் மதிப்புள்ள இடம் அர்ப்பணிப்பு

Published On 2021-09-17 04:45 GMT   |   Update On 2021-09-17 04:45 GMT
நூலகத்துக்கு செய்யும் உதவி பலரது கல்வி அறிவுக்கு வழி வகுக்கும் செயலாகும்.
பல்லடம்:

பல்லடம் அடுத்த கரடிவாவியில் 18 ஆண்டுகளாக கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள், 263 புரவலர்கள் என சிறந்த நூலகமாக உள்ளது. 

12,400க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்தநிலையில் கரடிவாவியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது 4 சென்ட் இடத்தை நூலகத்துக்கு தானமாக கொடுக்க முன்வந்தார். 

இதையடுத்து இடத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கரடிவாவியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ரஞ்சிதா, இட உரிமையாளர் ஆனந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் கூறுகையில்: 

நூலகத்துக்கு செய்யும் உதவி பலரது கல்வி அறிவுக்கு வழி வகுக்கும் செயலாகும். சிறிதாக உதவி செய்யவே யோசிக்கும் இக்காலத்தில், ஏரத்தாழ ரூ. 20 லட்சம்  மதிப்புடைய இடத்தை  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ஆனந்தகுமார் நூலகத்துக்கு வழங்கிய செயல் பாராட்டுக்கு உரியது.

விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு நூலக கட்டுமான பணி நடக்கும் என்றார். நூலகத்துக்கான இடத்தை அர்ப்பணித்ததற்கான ஆவணங்களை ஆனந்தகுமார் ஒப்படைத்தார். முடிவில் கிளை நூலகர் தனபாக்கியம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News