செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2021-09-17 04:31 GMT   |   Update On 2021-09-17 04:31 GMT
பிரதமர் மோடி நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என டுவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேசத்துக்கு சேவை செய்வதில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும், உறுதியும் பாராட்டுக்குரியவை !


தாங்கள் நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News