செய்திகள்
கோப்புபடம்

அரசு புறம்போக்கு நிலங்களில் கனிம வளங்களை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை - சிறப்பு பணிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2021-09-17 04:09 GMT   |   Update On 2021-09-17 04:09 GMT
பட்டா நிலங்களில் இருந்து மண், மணல் மற்றும் கற்களை எடுக்கும் போது வருவாய்த்துறையினரின் அனுமதி பெற வேண்டும்.
அவிநாசி:

கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தவிர்க்கும் வகையில் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் சிறப்பு பணிக்குழு கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் ராகவி தலைமை வகித்தார். அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பட்டா நிலங்களில் இருந்து மண், மணல் மற்றும் கற்களை எடுக்கும் போது வருவாய்த்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அத்தகைய கனிம வளங்களை யாரும் எடுக்கவோ, கடத்தவோ கூடாது.

அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட துறையினர் போலீசில் புகார் கொடுத்து அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News