செய்திகள்
நாகர்கோவிலில் இன்று சாரல் மழை பெய்ததையடுத்து குடைபிடித்து செல்லும் பள்ளி மாணவிகள்

குமரியில் மழை நீடிப்பு- களியலில் 24.2 மி.மீ. பதிவு

Published On 2021-09-16 06:58 GMT   |   Update On 2021-09-16 06:58 GMT
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.35 அடியாக இருந்தது. அணைக்கு 335 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

களியல் பகுதியில் நேற்று மாலை விட்டு விட்டு மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. அங்கு அதிகபட்சமாக 24.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்தது.

நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தவாறு சென்றனர்.

கோழிப்போர் விளை, அடையாமடை, குருந்தன்கோடு, புத்தன் அணை, பூதப்பாண்டி, குளச்சல், இரணியல் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.35 அடியாக இருந்தது. அணைக்கு 335 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 426 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 61.25 அடியாக உள்ளது. அணைக்கு 197 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 430 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.



Tags:    

Similar News