செய்திகள்
விடுமுறை

சுகாதார ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் ஒருநாள் விடுமுறை

Published On 2021-09-15 21:01 GMT   |   Update On 2021-09-15 21:06 GMT
கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாமில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:

பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், சுகாதார சேவைகளின் அனைத்து துணை இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 13-ந்தேதி வரை 4 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 434 பயனாளிகள் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி மூலம் பயன் அடைந்து இருக்கின்றனர். சுகாதார சேவைகளின் அனைத்து துணை இயக்குனர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளால் இந்த சாதனை செய்யப்பட்டு இருக்கிறது.



இதேபோல், கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாமில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக அனைத்து சுகாதார சேவைகளின் துணை இயக்குனர்கள், தடுப்பூசி மற்றும் வழக்கமான வேலைகளை பாதிக்காமல் சுழற்சி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News