செய்திகள்
தமிழக தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

Published On 2021-09-13 09:03 GMT   |   Update On 2021-09-13 10:10 GMT
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதன்படி இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.



இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை கூட்டம் நடந்ததால் தேர்தல் தேதி அறிவிப்பும் தள்ளி போனது. இந்த நிலையில் சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிந்தது. இன்று மாலை 5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அப்போது உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார்.



Tags:    

Similar News