செய்திகள்
தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

திருப்பூர் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் குவிவதால் கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-09-12 09:37 GMT   |   Update On 2021-09-12 09:37 GMT
விடுமுறை தினமான இன்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதோடு சந்தைக்கு உள்புறம் மற்றொரு பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூடுதலான டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

அந்த வகையில் விடுமுறை தினமான இன்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே  இருந்தது. இதனால் விலை அதிகரித்து காணப்பட்டன. ஆனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்றனர். மீன் மார்க்கெட்டில் பொது மக்கள் அதிகளவில் கூடிய தால் சமூக இடைவெளி பின்பற்றபடவில்லை.

இதேபோல் ஆடு, மாடு ,கோழி இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் நிலை உள்ளது. எனவே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News