செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை-பல்லடம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Published On 2021-09-11 08:51 GMT   |   Update On 2021-09-11 08:51 GMT
பல்லடம் அரசு கலை,அறிவியல் கல்லூரியில் நாளை 12-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
பல்லடம்:

பல்லடம் பகுதியில் கடைகள்,வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்லடம் அரசு கலை,அறிவியல் கல்லூரியில் நாளை 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் ஆதார் கார்டு எடுத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

பல்லடம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கடை மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கடைகளில் பணியாற்றி வருவது தெரியும்பட்சத்தில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அறிவுரைபடி அந்த கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

13-ந்தேதி திங்கட்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை,சுகாதார துறை, காவல் துறை ஆகியவை இணைந்து வணிக நிறுவனங்கள்,கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News