செய்திகள்
கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய மக்கள் நீதி மய்யத்தில் குழு அமைப்பு

Published On 2021-09-11 05:49 GMT   |   Update On 2021-09-11 05:49 GMT
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு மாவட்ட வேட்பாளர் தேர்வுக்குழுவை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது ம.நீ.ம.வின் பிரதான லட்சியங்களுள் ஒன்று. இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த ஏரியா சபை போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு மாநில தலைமைப்பணிக்குழு மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்குமான மாவட்ட வேட்பாளர் தேர்வுக்குழுவை அறிவிக்கிறேன்.

மாநிலத் தலைமைப் பணிக் குழுவில் துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா சேதுபதி, மாநிலச் செயலாளர்கள் சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம், சரத்பாபு ஏழுமலை ஆகியோர் இடம்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட வேட்பாளர் தேர்வு குழுவையும் 9 மாவட்டங்களுக்கு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News