செய்திகள்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Published On 2021-09-10 22:25 GMT   |   Update On 2021-09-10 22:25 GMT
மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.

வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News