செய்திகள்
புத்தாக்க பயிற்சி முகாமில் கமிஷனர் வனிதா பேசியதையும், கலந்து கொண்ட பெண் காவலர்களையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் மாநகர பெண் போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி

Published On 2021-09-09 09:27 GMT   |   Update On 2021-09-09 09:27 GMT
உளவியல், மனநலம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு பணி சூழல், மனநலம் மற்றும் உளவியல் தொடர்பான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் மாநகர போலீஸ் கமிஷனர் கூட்டரங்களில் நடைபெற்றது. 

பயிற்சி வகுப்புகளுக்கு வந்தவர்களை துணை போலீஸ் கமிஷனர் அரவிந்த வரவேற்றார்.மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா இந்தப் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கட்டுப்பாடும், ஒழுக்கமும் நிறைந்த காவல் துறையில் பெண் போலீசார் எவ்வாறு பணிபுரிய வேண்டும்.

பணி மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எவ்வாறு ஒருங்கிணைத்து செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

இதையடுத்து பெண்கள் மற்றும், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும். அந்த வழக்குகளை புலன்விசாரணை செய்வது குறித்தும் துணை கமிஷனர் ரவி பயிற்சி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ருத்ரா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநலம் மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் சம்ஷாத் பானு ஆகியோர் உளவியல், மனநலம் தொடர்பான ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினர். 

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண்போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News