செய்திகள்
மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

150 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள் கட்டப்படும்- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு

Published On 2021-09-08 10:10 GMT   |   Update On 2021-09-08 12:15 GMT
1000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்கப்படும் சட்டசபையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில்இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள் கட்டப்படும்

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாய கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

1000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்கப்படும்

31 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுக்கும் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும்

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு அடைகாப்பக சேவை வழங்கும் திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News