செய்திகள்
கைது

ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-04 11:08 GMT   |   Update On 2021-09-04 11:08 GMT
ஜோலார்பேட்டை அருகே கள்ள சாராயம் விற்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மண்டலவாடி அனுமம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன். இவரது மகன் ஆஞ்சி (வயது49) இவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

அவரை பிடித்து சோதனை செய்யும் போது 5 லிட்டர் கள்ள சாராயம் விற்பனை செய்ததை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 35) தனது வீட்டின் பின்புறம் கள்ள சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு சங்கர் உள்பட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி சாமுண்டி வட்டம் பகுதியில் தங்குதடையின்றி ஆந்திரா, கர்நாடக மாநில மதுபாட்டில்கள் படு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஜோலார்பேட்டை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Tags:    

Similar News