செய்திகள்
அமைச்சர் தாமோ அன்பரசன்

படித்த வேலை இல்லாத இளைஞர்கள் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி- அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Published On 2021-09-02 09:25 GMT   |   Update On 2021-09-02 09:25 GMT
2021-22-ம் ஆண்டில் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சட்டசபையில் இன்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாக்கல் செய்த கொள்கை விளக்க அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு குறு-சிறு நடுத்தர தொழில் செய்முறை பயிற்சி மாதம் ஒன்றுக்கு ரு.5 ஆயிரம் ஊக்க தொகையுடன் அதிகபட்சமாக 6 மாத காலத்துக்கு அளிக்கப்படுகிறது.

2021-22-ம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் திறன் வளர்ச்சிக்காக 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில குறிப்பிட்ட தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகளில் இட மதிப்பு அதிகமாக உள்ளதால் அவை விற்பனை செய்யப்படாமல் உள்ளது. எனவே அந்த இட மதிப்பை தொழில் தொடங்குவோர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மறு நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழிற்பேட்டைகளில் உள்ள 3,600 ஏக்கர் நிலத்தில் ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோருக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். இந்த நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக இருப்பதால் பட்டா பெற காலதாமதம் ஆகிறது. எனவே உரிய அலுவலர்கள் கொண்ட குழுவை அமைத்து பட்டா பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News