செய்திகள்
கண்டியன் கோவில் ஆதிதிராவிடர் காலனியில் கலெக்டர் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

கணினி பதிவு மூலம் பட்டா வழங்கும் பணி - கலெக்டர் ஆய்வு

Published On 2021-09-01 09:44 GMT   |   Update On 2021-09-01 09:44 GMT
கண்டியன் கோவில் ஆதிதிராவிடர் காலனியில் 25 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவில் குடியிருப்போர் மற்றும் காலியாக உள்ள வீட்டுமனைகள் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தெற்கு வட்டத்தில் கண்டியன் கோவில் ஆதிதிராவிடர் காலனி மற்றும் காங்கயம் வட்டம் முள்ளிபுரத்தில் ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கணினியில் பதிவுகள் மேற்கொண்டு பட்டா வழங்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனை கலெக்டர் டாக்டர். எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார். கண்டியன் கோவில் ஆதிதிராவிடர் காலனியில் 25 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவில் குடியிருப்போர் மற்றும் காலியாக உள்ள வீட்டுமனைகள் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார். 

முன்னதாக காங்கயம் வட்டத்தில் நத்தக்காடையூர், முள்ளிபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கணினியில் பதிவுகள் மேற்கொண்டு பட்டா வழங்குவது குறித்த ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், வட்டாட்சியர்கள் சிவகாமி (காங்கயம்), கனகராஜ் (திருப்பூர் தெற்கு) மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News