செய்திகள்
அண்ணாமலை

பல்கலைக்கழகங்களை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்- அண்ணாமலை

Published On 2021-09-01 09:21 GMT   |   Update On 2021-09-01 09:21 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இன்று காலை நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். தொடர்ந்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
தூத்துக்குடி:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து இன்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1958-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முதல்-அமைச்சரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் நடந்து வருகிறது.

அதன்படி ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதையே பா.ஜ.க. கட்சி சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என தி.மு.க.வினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இன்று காலை நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். தொடர்ந்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

பின்னர் நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இன்று மாலை சங்கரன் கோவிலில் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.


Tags:    

Similar News