செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 63 எம்.எல்.ஏ.க்கள் மீது 3 சட்டப்பிரிவில் வழக்கு

Published On 2021-09-01 06:05 GMT   |   Update On 2021-09-01 07:53 GMT
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்கும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 63 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். நேற்று சட்டசபை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை:

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்கும் சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 63 அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள். வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டசபை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் அருகில் திடீரென ஓ.பன்னீர் செல்வமும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அனைவரையும் கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 63 எம்.எல்.ஏ.க்கள் மீதும் 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பலாக கூடுதல், மறியலில் ஈடுபடுதல், தொற்று நோய் பரவல் தடுப்புசட்டம் ஆகிய 3 சட்டபிரிவுகள் அவர்கள் மீது பாய்ந்து உள்ளன.

Tags:    

Similar News